சிறையில் பிரேமானந்தாவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் சிறையில் போலி சாமியார் பிரேமானந்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் நான்கு ஆயுள்தண்டனைகள் விதிக்கப்பட்ட திருச்சி போலிச்சாமியார் பிரேமானந்தா கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் நெஞ்சுவலியால் துடித்தார்.
இதையடுத்து அவரை சிறை அதிகாரிகள் உடனடியாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications