பிஇ விண்ணப்ப வினியோகம் தொடங்கியது-19ல் பிவிஎஸ்சி
சென்னை: பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரிகள் பிஇ பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வினியோகிக்கத் தொடங்கிவிட்டன.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ முடிவுகள் வெளியான நிலையில் தனியார் கல்லூரிகளில் பிஇ படிப்புக்கான விண்ணப்பங்கள் நேற்றே தொடங்கிவிட்டது.
அரசு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் கொடுக்கப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம், அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகளிலும் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கிறது.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர். பிஇ தகுதி மதிப்பெண் இந்த ஆண்டுமுதல் குறைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரிகளில் குவிகின்றனர்.
19 முதல் பி.வி.எஸ்.சி விண்ணப்பங்கள்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் மே 19ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications