வழக்குகளில் தோற்றால் அரசு வக்கீல் டிஸ்மிஸ்- அமைச்சர் எச்சரிக்கை
கோவை: வழக்குகளில் வெற்றி பெறாத அரசு வழக்கறிஞர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்.
அனைத்து மாவட்ட சிவில் மற்றும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் எவ்வளவு வழக்குகள் நடத்துகிறார்கள், அதில் அரசுக்கு சாதகமாக எத்தனை வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர்கள் அரசுக்கு தெரியப்படுத்துவதில்லை.
இனி இதற்காக சட்டத்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்படும. இந்த பிரிவுக்கு அனைத்து அரசு வழக்கறிஞர்களும் மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அந்தந்த மாதங்களில் நடத்திய வழக்குகள், அவற்றில் சாதகம் மற்றும் பாதகமாக அமைந்த வழக்கு விவரங்களை அந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
வழக்கின் வெற்றிக்கு தகுந்தாற்போல ஊக்கம் அளிக்கப்படும். அதே சமயம் வழக்குகளில் வெற்றி பெற முடியாத தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் தயவு தாட்சண்யமின்றி பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்தமாக கட்டடம் கட்டித் தரப்படும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications