ஆடு மேய்த்த பெண்ணை போதையில் கற்பழித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகில் உள்ள செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சென்னியம்மாள் (40) என்பவர் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது எல்லத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி என்ற வாலிபர் குடி போதையில் அங்கு வந்துள்ளார்.
தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சென்னியம்மாளை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.
இது குறி்த்து சென்னிம்மாளின் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் வெள்ளியங்கிரி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications