கோர்ட் உத்தரவுப்படி ஜெ.க்கு பாதுகாப்பு வழங்க மு.க. உறுதி

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கூடுதல் பாதுகாப்பு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்குத் தக்கபடி பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தமிழக சட்டசபையில் உறுதி அளித்தார்.

சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இசட் பிளஸ் பாதுகாப்பில் ஜெயலலிதா இருந்தவர் என்பதால் அவருக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பபட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தை அவர் அணுகியிருக்கிறார். உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ அவருக்கு எந்த வகையான பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறதோ அதைச் செய்து தருவதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது.

இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தவர்களுக்கு எந்தவகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டுள்ளதோ அதன்படியே இதுவரை ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது போயஸ்கார்டன் வீட்டைச் சுற்றிலும் ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள், ஜாமர் கருவி, ஆம்புலன்ஸ், அவரது அணிவகுப்பு வாகனங்கள் எல்லாம் பெட்ரோலில் இயங்குவதாக இருக்கவேண்டும் என்றும் டீசல் வாகனங்கள் வேண்டாம் என்றும் தனது வழக்கு மனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவையெல்லாம் மத்திய அரசின் உத்தரவில் இல்லை.

குண்டு துளைக்காத கார் வேண்டும் என்று அவர் கோரியதைத் தொடர்ந்து முதல்வருக்குரிய காரைப் போன்றே அவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டார்.

தான் குறிப்பிடும் அதிகாரிகளை அவரது பாதுகாப்புக்கு அனுப்பவேண்டும் என்றும், ஓய்வு பெற்ற டிஜிபி அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்து தனது பாதுகாப்பை மேற்பார்வையிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டிருந்தார்.

இந்த கோரிக்கைகளும் மத்தியஅரசின் ஆணையில் இல்லாததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+