இந்தியாவில் 20% போலி மருந்து: அதிர்ச்சி ரிபோர்ட்

தலைவலி, ஜூரம் என்றால் டாக்டரை பார்ப்பதை தவிர்த்து மெடிக்கல் ஷாப்பில் பாரசிட்டமல் போன்ற மருந்துகளை வாங்கி சாப்பிடும் 'கலாசாரம்' நம்மில் பலருக்கு உண்டு. அப்படி சாப்பிடுபவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி தரும்.
இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளில் 20 சதவீதம் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் நோயை எதிர்த்து செயல்படவில்லை என்றால் போய் தொலைகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் உடலுக்கு கேடுவிளைவிப்பவை என்று தெரியும் போது அதிர்ச்சி ஏற்படுகிறதல்லவா?
மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
61 முன்னணி மருந்து கம்பெனிகளின் மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. காசநோய், அலர்ஜி, சர்க்கரை நோய், இருதய நோய், ஸ்டிராய்டு, NSAID ரக வலி நிவாரணிகள் மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளை சோதித்து அறிய உள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications