போனில் உறவினருக்கு சிபாரிசு: அமைச்சர் பூங்கோதை விலகல்
சென்னை: ஏடிஜிபியுடன் போனில் சிபாரிசு செய்த பேச்சு வெளியான விவகாரத்தையடுத்து தமிழக சமூகநலத்துறை அமைச்சர் ராஜிநாமா செய்துள்ளார். இந்த தகவலை முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் சட்டசபையில் இன்று எழுப்பப்பட்டது. அப்போது தன்னிடம் அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா கடிதம் அளித்திருப்பதாகவும் இதுபற்றி விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி பதில் அளித்தார்.
முன்னதாக, லஞ்ச வழக்கில் உறவினரை காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஏடிஜிபி உபாத்யாயாவுடன் முதல்வரின் செயலர் பேசியது ஒட்டுக் கேட்பதாக எழுந்த புகார் குறித்து சண்முகம் கமிஷன் இன்று விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியதாக சிடி ஆதாரத்தை சுப்ரமணிய சாமி வெளியிட்டார்.
அந்த சிடியில் அமைச்சர் பூங்கோதை, (தனது உறவினர்)ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பிதான் உள்ளது. அவர் என் அப்பாவின் சொந்த அக்கா மகன். இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் கவனித்து கொள்வார்கள் என்று பேசியிருப்பது பதிவாகியுள்ளது.
இந்த சிடி ஆதாரத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் அளித்து பூங்கோதையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தப்போவதாகவும் சுப்ரமணிய சாமி கூறியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications