போலீஸ் கெட்-அப்பில் கைவரிசை: 6 கொள்ளையர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: போலீஸ் கெட்-அப்பில் அரிசி வியாபாரியை தாக்கி பணம் பறித்த கைவரியை காட்டிய 6 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அரிசி வியாபாரி முத்துராமலிங்கம். நேற்று முன் தினம் பந்தல்குடியில் இருந்து அரிசி விற்ற பணத்துடன் அருப்புக்கோட்டைக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது தூத்துக்குடி அருகே ஒரு டாடோ சுமோ காரில் வந்த சிலர் அவரை வழி மறித்தனர். அதிலிருந்து போலீஸ் உடை அணிந்தவர்கள் இறங்கி வந்தனர். போலீஸ் என்று நினைத்து முத்துராமலிங்கமும் ஒதுங்கி நின்றார்.

அப்போது திடீரென்று அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் ராமலிங்கத்தைத் தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது.

இது குறித்து அருப்புக்கோட்டை போலீசில் முத்துராமலிங்கம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி சாலையில் சென்ற ஒரு டாடா சுமோ காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் பயரங்கர ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உள்ளே அமர்ந்து இருந்தவர்கள் போலீஸ் உடையில் இருந்தால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் போலீஸ் கெட்-அப்பில் சென்று அவர்கள் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

போலீஸ் உடையில் இருந்த சிவக்குமார், செல்வராஜ், கார்த்திகேயன், திருப்பதி, பெரிய கருப்புசாமி, கார் உரிமையாளர் வில்வதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+