அமைச்சர்கள் ராஜிநாமா: பாக். அரசுக்கு திடீர் நெருக்கடி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கூட்டணி ஆட்சியில் இருந்து நவாஸ் ஷெரிப் கட்சி விலகியது. அக்கட்சியின் அமைச்சர்கள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரிப் ஆதரவுடன் பாகிஸ்தானில் ஆட்சி நடத்தி வருகிறது.
அதிபர் முஷாரப் டிஸ்மிஸ் செய்த நீதிபதிகளை, ஆட்சி பொறுப்பேற்ற 30 நாட்களுக்குள் (மே 12ம் தேதிக்குள்) மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று நவாஸ் ஷெரிப் நிபந்தனை விதித்திருந்தார். இந்த கெடு முடிந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜர்தாரியுடன் ஷெரிப் 3 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைத்து. இதையடுத்து அமைச்சரவையில் இருந்து விலக ஷெரிப் கட்சி முடிவு செய்தது. அதன்படி அக்கட்சியின் 9 அமைச்சர்களும் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் கிலானியிடம் நேற்று அளித்தனர்.
பிரச்னைகள் அடிப்படையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சிக்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஷெரிப் அறிவித்துள்ளார். அவர் வசம் இருந்த நிதித்துறை தவிர மற்ற துறைகள் காலியாக வைக்கப்படும். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்ட உடன் அவர்கள் அமைச்சர்களாக தொடருவார்கள் என்று ஜர்தாரி தெரிவித்தார்.
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் உடனடியாக நிதியமைச்சர் நியமிக்கப்படுகிறார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பிக்கள் கூட்டம் இன்று ஜர்தாரி வீட்டில் நடக்கிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications