ஜெய்ப்பூர் தாக்குதல்: அண்டை நாட்டுக்கு தொடர்பு-மத்திய அரசு
டெல்லி: ஜெய்ப்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அண்டை நாட்டின் தொடர்பு உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்நாட்டு கலவரத்தால் தவித்து வரும் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் அல்லது மியான்மர் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு ஜெய்ப்பூர் சம்பவத்தில் தொடர்பு இருக்கும். இந்த சம்பவத்துக்கு பொறுப்பானது என்று சந்தேகிக்கப்படும் அமைப்பின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் அந்த அமைப்பு எது என்பது விரைவில் அம்பலத்துக்கு வரும். வாராணாசி, பைசாபாத், ஆஜ்மீர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளது. இந்த தாக்குதல்கள் எல்லாவற்றிலுமே ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமிய அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது.
வகுப்பு ஒற்றுமையை சீர்குலைப்பது என்பதே இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாகும். ஆனால் தீவிரவாதிகளின் இந்த நோக்கம் இதுவரை ஈடேறியது இல்லை. மாறாக வகுப்பு நல்லிணக்கம் வலுபெற்று வருகிறது. தீவிரவாதிகளின் குரூர சதித்திட்டத்துக்கு மக்கள் இரையானதில்லை.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் என்ன என்பதை தேசிய அதிரடிப் படையினர் விரைவில் கண்டுபிடிப்பார்கள். ராஜஸ்தான் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு படை வைத்திருந்தாலும் அதை குறித்த தருணத்தில் சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அவை இருந்தும் பயனில்லை என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications