கடலில் குளித்த சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் ராட்சத அலையில் சிக்கி சகோதரர்கள் உள்பட 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர்.
தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். தெர்மல் தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவரது மகன்கள் பார்த்திபன், வசந்தராஜ், சிவா (எ) சிவகுமார். பார்த்திபன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இரட்டையர்களான வசந்தராஜூம், சிவாவும் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் விக்னேஷ். 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர் கோடை விடுமுறைக்காக தெர்மல் நகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தார்.
பார்த்திபன், வசந்தராஜ், சிவக்குமார், விக்னேஷ் உள்பட அதேப் பகுதியைச் சேர்ந்த 10 பேர் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக விருந்தினர் மாளிகைக்கு பின்னால் உள்ள கடற்கரையில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கி பார்த்திபன், சிவா, வசந்தராஜ், விக்னேஷ் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற 6 பேரும் பீச் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கடலுக்குள் சென்று தேடினர்.
அப்போது பார்த்திபன், அவரது தம்பி வசந்தராஜ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். விக்னேஷின் உடல் நள்ளிரவில் கிடைத்தது.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications