வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட வள்ளியூர் பஞ். துணைதலைவர்
நெல்லை: நெல்லை அருகே வெடிகுண்டு உள்பட பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற வள்ளியூர் பேரூராட்சி துணைத்தலைவர், அவரது தம்பி மற்றும் மாஜி தலைவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் அண்மையில் நடந்த சில கொடூர கொலை சம்பவங்களையடுத்து குற்றவாளிகளைத் தேடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை அருகே வள்ளியூரில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
காருக்குள் வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் சண்முகபாண்டியன், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராமசந்திரன் ஆகியோர் இருந்தனர். கார் சீட்டுக்கு அடியில் வெடிகுண்டுகள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து அவர்களை விசாரணைக்காக போலீசார் நெல்லைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட சண்முகபாண்டியன், ராமசந்திரன் ஆகியோர் மீது 1991-ல் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ஏட்டு அருள்ராஜ் என்பவரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications