தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் வெட்டி படுகொலை
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஒரே குடும்பத்தைச் ேசர்ந்த தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஒருவரின் தலையை காளி கோவில் சூலாயுதத்தில் சொருகி வைத்துச் சென்றுள்ளது கொலைகார கும்பல்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வங்குடி. அக்கிராமத்தைச் சேர்ந்த காலனி தெருவை சேர்ந்தவர் தேசிங்குபாலன். அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த காசிநாதனுக்கும் நிலப்பிரச்னையில் முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, காசிநாதன் தரப்பை சேர்ந்த 9 பேர் தேசிங்குபாலனை வெட்டி கொலை செய்தனர். இதனால் இருதரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் காசிநாதன் தரப்பை பழிக்குபழி வாங்க தேசிங்குபாலன் தரப்பைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கும்பல் வங்குடி காலனிக்கு நேற்று காலை வந்தது.
காசிநாதன் (65), அவரது மகன் மகாலிங்கம் (26), அவரது உறவினர் பாரிவள்ளல் என்பவரின் மகன் பிரபு (24), சூரியமூர்த்தி என்பவரின் மகன் சுரேஷ் (28) ஆகியோர் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அரிவாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் எதிர் தரப்பு வருவதை பார்த்த மகாலிங்கம் தரப்பினர் வீட்டை நோக்கி ஓடினர். அநத் கும்பல் அவர்களை விரட்டிக் கொண்டு வந்தது. இதை பார்த்த காசிநாதனின் மனைவி ஜானகி, மற்றொரு மகன் தர்மலிங்கம் (34) ஆகியோரும் ஓடினர்.
தெரு தெருவாக ஓடிய அவர்களை அந்த கொலைகார கும்பல் ஜானகியை தவிர மற்ற 5 பேரையும் ஓட ஓட விரட்டி பயங்கரமாக வெட்டி சாய்த்து. இதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். அப்போதும் கொலை வெறி அடங்காத அந்த கும்பல் காசிநாதனின் தலையை தனியாக துண்டித்து அருகில் உள்ள காளி கோயில் சூலத்தில் குத்தி தொங்கவிட்டது.
பிரபுவின் தலையை வெட்டி கோயிலிக்கு பின்னால் வீசி விட்டு அந்த கும்பல் தப்பியது. இந்தப் பயங்கர சம்பவத்தால் கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் கிராமத்தினர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தகவலறிந்த திருச்சி ஐஜி கரண்சின்ஹா, டிஐஜி அசோக்குமார்தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
பதற்றம் காரணமாக வங்குடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்ளில் திருஞானம், பழனிசாமி, பிரபாகரன், தினேஷ், ராஜதுரை, ரமேஷ், கனகவள்ளி, சசிகலா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications