மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி - ஒரு வாரம் ஓய்வு

முதல்வர் கருணாநிதிக்கு கடும் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முதல்வரின் நலம் குறித்து போன் மூலம் விசாரித்தறிந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு முதல்வரின் உடல் நலம் வெகுவாக தேறியது. இதையடுத்து நேற்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
நலம் விசாரித்த சோ
கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து சேர்ந்த அவரை முதல் நபராக பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் கால் மணி நேரம் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார் சோ.
முதல்வர் கருணாநிதி ஒரு வாரத்திற்கு பூரண ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி பதவியேற்கும் விழாவில் மட்டும் முதல்வர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
வீடு திரும்பிய முதல்வரை மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications