தலைமறைவாக இருந்த திண்டுக்கல் சங்கிலி பாபா கைது
திண்டுக்கல்: ஆபாசப் படம் எடுத்தது, இளம் பெண்ணை மிரட்டிக் கல்யாணம் செய்து கொண்டது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய திண்டுக்கல் சங்கிலி பாபாவை போலீஸார் சேலத்தில் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் அப்துல்லா. இவரது மகள் ஆபிதா (29). இவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், என்னை திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த முகம்மது மதார் என்கிற சங்கிலி பாபா (45) மிரட்டி, மோசடியாக கல்யாணம் செய்து கொண்டார். மேலும் என்னை திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். ஆபாசப் படமும் எடுத்தார் என்று கூறியிருந்தார்.
மேலும் சங்கிலி பாபா சட்டவிரோதமாக துப்பாக்கிகளை விற்று வந்ததாகவும் அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து சங்கிலி பாபாவின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல முக்கிய சிடிக்கள், போட்டோக்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். சங்கிலி பாபா தலைமறைவாகி விட்டார்.
அவரைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று சேலம் லாட்ஜ் ஒன்றில் சங்கிலி பாபா தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் சங்கிலி பாபாவை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரை உடனடியாக தாடிக்கொம்பு கொண்டு வந்த போலீஸார் அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.
சங்கிலி பாபா பல்வேறு பெண்களை மோசடியாக கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் துப்பாக்கி விற்றதாக ஆபிதா கூறியிருப்பதால் அதுகுறித்தும் போலீஸார் துருவித் துருவி பாபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் இறுதியில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சங்கிலி பாபா பல்வேறு பெயர்களை வைத்துள்ளார். அவர் மீது ஏற்கனவே கேரளாவில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதவிர தஞ்சையில் 2 வழக்குகளும், கோவையில் ஒரு வழக்கும் உள்ளன.
சென்னை பூக்கடை, மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் பாபா மீது வழக்குகள் உள்ளன.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications