கர்நாடக தேர்தல் இறுதி பிரசாரம் இன்று முடிவு

பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பீதர், கதக், தார்வாட், ஹவேரி ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு கர்நாடக பகுதியில் உள்ள 69 தொகுதிகளில் இன்று உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. இன்று மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் இந்த தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்தகுமார், வெங்கய நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவி சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் தேவெ கௌட, குமாரசாமி ஆகியோரும் தொகுவாரியாக தீவிர பிரசாரம் செய்தனர்.
கர்நாடகத்தில் இதுவரை நடந்த 2 கட்ட தேர்தல்களைவிட இந்த இறுதிக்கட்டத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் நடக்கவுள்ள 69 தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜகவுக்கு சமவாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதில் அதிக சீட்டுகளை வெல்லும் கட்சிக்கு ஆட்சியைப் பிடிப்பதற்கான மெஜாரிட்டி வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.
இதனால் தலைவர்களின் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.
இறுதி கட்டத் தேர்தல் நடக்கவுள்ள வடகர்நாடக பகுதி இம்மாநிலத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களைக் கொண்டது. இத்தனை ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்ட பகுதி என்ற குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் தனி மாநில கோரிக்கைகூட இப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான முன்னாள் முதல்வர் தரம்சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் கார்கே ஆகியோர் தங்கள் தொகுதியில் தொடர்ந்து 9வது முறையாக வென்று சாதனைபுரிவதற்காக களத்தில் உள்ளனர். அவர்களது தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்கிறது.
இறுதிக்கட்ட பிரசாரத்தை தேவெ கௌட ஊப்ளியில் முடிக்கிறார். பிலிதி தொகுதியில் சுஷ்மா ஸ்வராஜ் இறுதியாக பேசுகிறார்.
உச்சக்கட்ட பிரசாரம் நடப்பதால் மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொகுதி முழுவதும் மத்திய துணை ராணுவப்படை நிறுத்தப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications