ஆந்திர தடுப்பணைகள: கருணாநிதி தடுக்க ஜெ. வலியுறுத்தல்

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
ஆந்திரா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அரசியல் ஆதாயத்துக்காக தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பொன்னையாற்றின் குறுக்கே 100 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தடுப்பணைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை, மைனாரிட்டி திமுக அரசு எடுத்ததாக தெரியவில்லை. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவும், எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்கவும், தன் மகனை சில வழக்குகளில் இருந்து தப்பிக்க வைக்கவும், மத்திய அரசை பயன்படுத்திக் கொள்ளும் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள ஜீவாதாரப் பிரச்னையான பொன்னையாற்று நீர் பிரச்னையில் ஏன் மத்திய அரசை நிர்பந்திக்கவில்லை?
ஒருவேளை இந்தப் பிரச்னையிலும் ஆந்திரா மக்களுக்கு ஆதரவாக, ஆந்திரா சட்டசபை தேர்தல் நடந்துமுடியும்வரை பொறுமை காப்போம். அந்த தேர்தலில் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அறிக்கை விடுக்கப் போகிறாரா கருணாநிதி?
மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பொன்னையாற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு கட்டவிருக்கும் அணைகளை தடுத்து நிறுத்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
கருணாநிதியின் மக்கள் விரோதச் செயலை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அவரை தமிழக மக்கள் கைவிடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை செய்யவிரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications