கர்நாடகாவில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. 3வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வடக்கு கர்நாடகாவில் உள்ள பெல்காம், தார்வாட், ஹவேரி, பீதர், குல்பர்கா, பீஜப்பூர், பாகல்கோட், காடக் ஆகிய மாவட்டங்களில் 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
களத்தில் 699 வேட்பாளர்கள் நிற்கின்றனர். 1.17 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.
தொடர்ந்து 8 முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் தரம்சிங், 9வது மறையாக வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைப்பாரா என்பதை நாளைய வாக்குப்பதிவு நிர்ணயிக்கப் போகிறது.
தரம்சிங் தவிர மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நாளைய வேட்பாளர்களில் முக்கியமானவர். கார்கேவும் இதுவரை 8 முறை வெற்றி பெற்றவர். நாளைய வாக்குப்பதிவில் இவரும் சாதனை படைக்கவுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 25 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உள்பட 52 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏற்கெனவே கடந்த 10 மற்றும் 16ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 66 சதவீதமும், 2வது கட்ட வாக்குப்பதிவில் 66.3 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications