மணல்குவாரி ஏல முடிவை அரசு கைவிட ராமதாஸ் கோரிக்கை

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2003ம் ஆண்டுக்கு முன்பு டெண்டர் மற்றும் ஏல முறை அமலில் இருந்தது. இந்த முறையின்போது, ஏலதாரர்கள் விதிமுறைகளை முற்றிலுமாக மீறிவிட்டனர். மணல்வளங்களைக் கண்மூடித்தனமாகச் அவர்கள் சுரண்டியதால் ஆறுகளை மீண்டும் சீர்படுத்த முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுவிட்டன.
ஏலதாரர்கள் பின்பற்றிய பேராசைத்தனமான கொள்ளையடிக்கும் நடைமுறைகள், இயற்கைச்சூழல் பாழாவதற்கும், நிலத்தடி நீர்வளம் குறைவதற்கும், தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் பயிர் விளைச்சல் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.
சட்டத்துக்குப் புறம்பாக மணல் விலையை அளவுக்கு மீறி உயர்த்தி பணம் பறித்தனர். இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கும் கட்டுமானப் பணிகளுக்குப் பாதிப்பும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டன.
மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுக்கும் பணியைப் பரவலாக்கப் போவதாக அரசு அறிவித்திருந்தது. அதற்கு அருகிலும் பரவலாகக் 'குழி' பறிக்க அனுமதிக்கப் போகிறார்கள் என்று பொருள்.
இப்படி பரவலாக 'குழி' பறித்து மணல் ஆதாரத்தை அள்ளிச் சென்றால், குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் என்று அரசு எப்படி நம்புகிறது? மக்களும் நம்ப வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறது? இப்படியெல்லாம் கேட்டால், 'கூட இருந்தே குழி பறிப்போர்' என்ற பழிச்சொல் பாய்ந்து வரும்.
மக்கள் நலன்கருதியும், மாநிலத்தின் வளம் கருதியும் ஆற்றுப் படுகைகளில் தனியாரை மீண்டும் பரவலாகக் 'குழி' பறிக்க அனுமதிக்காதீர் என்று குரல் எழுப்புவதில் இருந்து எத்தகைய பழிச்சொல்லும் திசை திருப்பி விட முடியாது. இப்படியெல்லாம் குரல் எழுப்புவது குற்றம் என்று கருதுவதில்லை.
எனவே, என் நெஞ்சம் இதற்காக குறுகுறுக்கப் போவதில்லை. குற்றமுள்ள நெஞ்சோடு அல்ல; தவறை தவறு என்று சுட்டிக்காட்டும் நெஞ்சத்தோடு இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என்றும் எத்தகைய முறைகேடுகளுக்கும் இடம் தராமல் மணல் எடுப்பதையும், விற்பதையும் அரசே தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications