சோனியா தமிழகம் வருகிறார்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தகவல்
ஈரோடு: ஈரோட்டில் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவி சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் மத்திய அமைச்சர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோட்டில் மாபெறும் பொதுக்கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.60,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு வகைசெய்யும் மசோதாவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு அரசு மேல்சபையில் தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கு நன்மைதரக்கூடிய பிரதமர் வேலை உத்தரவாதத் திட்டத்தை வெற்றிகரமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஈரோடு பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் இந்த சாதனைகளை எல்லாம்
சோனியா காந்தி விளக்கி பேசுவார். கூட்டத்தில் அவர் பங்கேற்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications