மியான்மரில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்
பாங்காக்: நர்கீஸ் புயலால் சிதிலமடைந்துள்ள மியான்மருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வந்துள்ளார்.
மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடே சுடுகாடாக மாறியுள்ளது. பல்வேறு உலக நாடுகள் மியான்மருக்கு உதவிக் கரம் நீட்டின. இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் உதவியை மியான்மர் ஏற்கவில்லை.
இந்த நிலையில், மியான்மருக்கு பான் கி மூன் வந்துள்ளார். யாங்கூன் விமான நிலையத்தில் அவரை மியான்மர் வெளியுறவு அமைச்சர் நியான் வின் வரவேற்றார். பின்னர் மியான்மர் வெளியுறவு அமைச்சகத்திற்கு பான் கி மூன் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் மியான்மர் புயலில் சிக்கி உயிரிழந்தோருக்காக அஞ்சலி செலுத்தி கையெழுத்திட்டார் மூன்.
பின்னர் யாங்கூனில் உள்ள புகழ் பெற்ற புத்த தலமான ஸ்வெடகான் பகோடா கோவிலுக்குச் சென்றார் பான் கி மூன். அங்கு அவர் மியான்மர் மக்களுக்காக வழிபாடு நடத்தினார்.
பின்னர் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவிலுக்கு நிதி அளித்தார் மூன்.
மியான்மர் பிரதமர் ஜெனரல் தெய்ன் செய்னை இன்று பான் கி மூன் சந்திக்கவுள்ளார்.
ராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மருக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு ஐ.நா. பொதுச் செயலாளர் ஒருவர் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். முந்தைய ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், தனது சார்பில் முன்பு பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தார். மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சென் சூகியை விடுவிப்பது தொடர்பாக அவர் ராணுவ ஆட்சியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications