இடி தாக்கி திருவண்ணாமலை கோவில் கோபுர சிலை உடைந்தது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கோபுரத்தை இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து விழுந்தது.
அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் மிகவும் உயரமானது ராஜகோபுரம். 217 அடி உயரம் கொண்ட இக்கோபுரம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியதாகும்.
ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள கோபுரத்திற்கு வள்ளால மகாராஜ கோபுரம் என்று பெயர். 1340ம் ஆண்டு வள்ளால மகாராஜா இந்தக் கோபுரத்தைக் கட்டியதால் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலும் இருந்தது. அப்போது வள்ளால மகாராஜா கோபுரத்தின் மீது இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்த சிலையை சரி செய்யும் பணியை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications