தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்தே உள்ளது-பாஜக
நாகர்கோவில்: தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவி்ன் கூட்டணி கதவுகள் திறந்தே உள்ளன என அகில இந்திய பாஜக செயலாளர் பல்வீர் பூஞ்ச் கூறினார்.
நாகர்கோவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெறும். மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தற்போதைய நிலையில் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதம் தலை தூக்கி உள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாத நிலையில் மக்கள் ஒருவித அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.
பிரதமர் பலவீனமாக உள்ளார். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கவனக் குறைவும், அச்சுறுத்தலும் உள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம், கடைசியாக நடந்து முடிந்த டெல்லி கண்டோன்மெண்ட் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக தேர்தலிலும் பாஜகவிற்கு வெற்றி உறுதிப்பட்டு விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவி்ன் கூட்டணி கதவு திறந்தே உள்ளது என்றார்.
பேட்டியின்போது மாநில பாஜக தலைவர் இல.கணேசன், துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications