பார்ட்டியில் பெண்ணை கடத்திய யுஎஸ் என்ஜீனியர்!
சென்னை: ஆசிரியையை கடத்திச் சென்றதாக அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சாப்ட்வேர் என்ஜீீனியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஆண்ட்ரூ பேக்கர் (30). இவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மனைவி ஆசிரியை கெல்லி லெபர்-ஐ (28), அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சாப்ட்வேர் என்ஜீனியரான ஜோன்ஸ் மாத்யூ என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.
மேலும், மாத்யூ தனது மனைவியை 2 நாட்கள் தனது பொறுப்பில் வைத்திருந்ததாகவும், பின்னர் அவரை விட்டு விட்டு மனைவியின் கைப்பை மற்றும் செல்போனுடன் தப்பி விட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆண்ட்ரூவும், கெல்லி லெபரின் குடும்ப நண்பர்தான் ஜோன்ஸ் மாத்யூ. 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டியில் கலந்து கொள்ள 3 பேரும் சென்றிருந்தனர்.
பார்ட்டியின்போது ஆண்ட்ரூ பேக்கர் முன்கூட்டியே அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் பார்ட்டி முடிந்ததும் கெல்லி லெபர் கால் டாக்சியில் தனது வீட்டுக்குக் கிளம்பினார். அவருடன் ஜோன்ஸ் மாத்யூவும் உடன் பயணித்துள்ளார். அந்த சமயத்தில்தான் கெல்லியை, ஜோன்ஸ் கடத்தியதாக பேக்கர் கூறுகிறார்.
இன்று காலைதான் கெல்லி தனது வீட்டுக்குத் திரும்பினார். தனது கணவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து பேக்கர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், ஜோன்ஸை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications