மலேசியாவில் தமிழக வாலிபர் கொலை-ஏழை குடும்பத்துக்கு உதவிய வைகோ

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பம்மனேந்தல் அருகே உள்ள சிறுகுளத்தை சேர்ந்தவர் மங்களம். இவரது மகன் மணிவண்ணன் (வயது 27) மலேசியாவில் வேலை செய்து வந்தார். அங்கு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வைகோ தான் பெரிதும் உதவியுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியிடம் பேசி, அவர் மூலமாக மலேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு உடலை கொண்டு வர ஏற்பாடு செய்தார் வைகோ.
மேலும் விமானம் கட்டணம், சென்னையிலிருந்து பம்மனேந்தல் கிரமத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் செலவு ஆகியவற்றையும் வைகோவே ஏற்றுக் கொண்டார்.
மலேசியாவில் மருத்துவமனையில் செலுத்த வேண்டிய கட்டணத்தை வயலார் ரவியின் உதவியோடு மலேசிய அதிகாரிகளிடம் பேசி ரத்து செய்யவும் வைத்தார் வைகோ.
மணிவண்ணனின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டபோது, அதை வாங்க வந்த தந்தை மங்களம், வைகோ வந்தால் தான் உடலை வாங்குவேன் என்று கதறி அழுதார். ஆனால், விமான நிலையத்துக்கு வைகோ திடீரென வர முடியாது, கூட்டம் கூடும் என்பதால் அவரை தொலைபேசியில் மங்களத்துடன் பேச வைத்தார் மதிமுக எம்பியான சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்.
அப்போது வைகோ போனில் ஆறுதல் சொல்ல வயதானவரான மங்களம் பேசக் கூட முடியாமல் அழுதார். அழுதபடியே வைகோவுக்கு நன்றி சொன்னார்.
இந்நிலையில் மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தவும் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறவும் வைகோ இன்று காலை பம்மனேந்தர் வந்தார்.மணிவண்ணனின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய வைகோவுக்கு அவரது காலில் விழுந்து குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். கண்கலங்கிய வைகோ அவர்களுக்கு ஆறுதல் சொன்ன பின் நிருபர்களிடம் பேசுகையில்,
ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கடத்தி சென்றுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏற்கனவே அவர்களால் கடத்தி செல்லப்பட்ட 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க பிரதமருக்கும், முதல்-அமைச்சருக்கும் தகவல் தெரிவித்து உள்ளோம். தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு தவறி விட்டது. பல வகையிலும் இலங்கை அரசு தமிழர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
அந்த அரசுக்கு இந்திய அரசும் உதவி வருகிறது. இதற்கு முதல்வசர் கருணாநிதியும் உடந்தையாக உள்ளார். எனவே மதிமுக மக்கள் சக்தியை சக்தியை திரட்டி போராடும் என்றார்.
எந்த விளம்பரமும் இல்லாமல் ஏழை குடும்பத்துக்கு உதவிய வைகோ நிச்சயம் பாராட்டுக்குரியவர்.












Click it and Unblock the Notifications