பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்கிறது?

பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 16ம், டீசல் விலையை ரூ. 10ம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
முன்னதாக பெட்ரோல் விலையை உயர்த்தாமலேயே சிக்கலை தீர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பெட்ரோலியப் பொருட்கள் மீதான சுங்க வரியை நிதியமைச்சகம் ரத்து செய்தால் விலையை ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை என பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
இதை நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்க மறுத்து வந்தார். ஆனால், இது குறித்து யோசிக்குமாறு சோனியாவும் பிரதமரும் அவருக்கு அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரியை முழுமையாக ரத்து செய்யாமல் அதை ஓரளவுக்குக் குறைப்பது, அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட விலையை கொஞ்சம் உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2ம் உயரலாம் எனத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 135 டாலராக உயர்ந்து விட்ட நிலையில் விலையை உயர்த்தாமல் விற்று வரும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.580 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனங்கள் ரூ.2.25 லட்சம் கோடியை இழந்துவிட்டன.
கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்கு இன்னும் 2 மாதங்களுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்களிடம் பணம் உள்ளது. இதனால் தினசரி செலவுகளை சமாளிக்கவே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றன.
மாதந்தோறும் இவை வங்கிகளிடம் ரூ.3,500 கோடி கடன் வாங்கி வருகின்றன. இந்த கடன் ரூ.65,000 கோடியாக உயர்ந்து விட்டது.
இதனால் வங்கிகளும் கடன் தர மறுத்து வருகின்றன.
இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.16ம், டீசல் விலையை ரூ.10ம், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.50ம் உயர்த்துமாறு மத்திய அரசிடம் அவை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
தன்னிச்சையாக உயர்ந்த பெட்ரோல் விலை:
இதற்கிடையே ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பல பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.51க்கு விற்கப்பட்ட பெட்ரோல் ரூ.1.50 உயர்த்தப்பட்டு ரூ.52.50க்கு விற்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications