தீயில் எரிந்த விடைத்தாள்கள்-அனைவரும் பாஸ்
சென்னை: வேலூரில் தீயில் எரிந்து விடைத் தாள்கள் நாசமான 566 மாணவ- மாணவிகளும் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை வெளியிட்ட அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவனாந்தம் நிருபர்களிடம் கூறுகையில்,
வேலூர் ஊரீஸ் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 24.4.08 அன்று திருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த விடைத் தாள்கள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. 23,976 விடைத்தாள்கள் அந்த அறையில் இருந்தன. இதில் 12,832 விடைத் தாள்கள் பாதிக்கப்பட்டன.
சேதமடைந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஆங்கிலம் 2ம் தாள்களாகும்.
இதில் 12,266 விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யும் அளவிற்கு இருந்தன. அதனால் அவற்றை திருத்தி மதிப்பெண் வழங்கப்பட்டது.
தீயில் முழுமையாக எரிந்தும், தீயை அணைக்கும் போது தண்ணீர் பீச்சி அடித்ததில் அழிந்து போன 480 விடைத் தாள்களும், 86 பிரைவேட் விடைத் தாள்களும் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாசமாயின.
இந்த 566 விடைத் தாள்களின் மாணவர்கள் மற்ற பாடங்களில் எடுத்த மார்க் மற்றும் ஆங்கிலம் முதல் தாளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
ஆங்கில முதல் தாளில் பெற்ற மதிப்பெண் அல்லது மற்ற 4 பாடங்களில் எடுத்த மதிப்பெண் இவற்றில் எது அதிகமோ அந்த மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட 566 விடைத் தாள்களுக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதில் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார் வசந்தி.
பள்ளி கல்வித் துறை இயக்குனராக பெருமாள்சாமி:
இதற்கிடையே தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குனராக உள்ள ஜெகன்நாதன் நாளை (31ம் தேதி) ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு பதிலாக டாக்டர் பெருமாள்சாமி புதிய பள்ளி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டள்ளார்.
பெருமாள் சாமி தற்போது ஆசிரியர்-ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இனி கூடுதலாக இந்த பொறுப்பை கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications