குமரி வள்ளுவர் சிலைக்கு ரசாயானப் பூச்சு-படகு சவாரி நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயானப்பூச்சு பூசப்படவுள்ளது. இதையடுத்து நான்கரை மாதங்களுக்கு வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே உள்ள பாறையில், 133 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை கடந்த திமுக ஆட்சியில் நிறுவப்பட்டது.
திருவள்ளுவர் சிலை கடல் காற்று உப்பினால் சேதம் அடைந்து வருகிறது. உப்பு காற்றினால் சிலையின் கை- கால் பகுதியில் உள்ள பாறைத் கற்கள் உதிர ஆரம்பித்துள்ளது. இது தொடர்ந்தால் சிலைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே உப்பு காற்றில் இருந்து சிலையை பாதுகாக்க, அதில் ரசாயன கலவையைப் பூச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசப்பட இருப்பதால், சிலையின் தலைப்பகுதி வரை இரும்பு கம்பிகளால் சாரம் கட்டப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், சிலை பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டியும், ரசாயன கலவை பூச்சு வேலை நிறைவடையும் வரை திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 16.10.2008 வரை நான்கரை மாதங்களுக்கு இந்தத் தடை அமலில் இருக்கும். வருகிற அக்டோபர் மாதம் 16-ந் தேதிக்கு பிறகே வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி தொடங்கும் என்று தெரிகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications