தொடர்கிறது ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தி்ல் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் பல இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுப்புறசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஆர்.ராஜகோபால், தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக்கழக தலைவர் தலைவர் சூசன் மேத்யூ, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும (சி.எம்.டி.ஏ.) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் அனு ஜார்ஜ், சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட சப்-கலெக்டர் எம்.பாலாஜி, உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையில் மருத்துவ மற்றும் சுகாதார சேவை கூடுதல் இயக்குனர் சி.முனியநாதன், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் டாஸ்மாக் மண்டல மேலாளர் கே.எஸ்.பழனிச்சாமி சேலம் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பேரூராட்சி இணை இயக்குனர் எம்.மதிவாணன், மாநில சுகாதார சமூகத் திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சீபுரம் டி.ஆர்.ஓ. வி.ராஜாராமன் முதல்வரின் கண்காணிப்பு பிரிவு டி.ஆர்.ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி டி.ஆர்.ஓ. ஏ.நம்பிராஜன், காஞ்சீபுரம் டி.ஆர்.ஓவாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்ட சிறப்பு துணை கலெக்டர் ஏ.சண்முகசுந்தரம், சேலம் டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட துணை கலெக்டர் எஸ்.பி.கார்த்திகா, சென்னை பேரூராட்சி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை துணை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி துணை கலெக்டர் பி.புத்தி சிகாமணி, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும டி.ஆர்.ஓவாக (நிலஆர்ஜிதம், வெளிவட்ட சாலை திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+