மகத்தான மனித நேயர் கருணாநிதி: கிருஷ்ணசாமி புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் கருணாநிதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்ற பன்முக ஆற்றல் பெற்ற பேரறிவுப் பெருந்தகை என்பதையெல்லாம் விட நட்புக்கு இலக்கணம், மகத்தான மனிதநேயர் என்கிற பண்பால் அவரது புகழ் மேலும் கோபுர கலசமாய் உயர்ந்து ஒளிர்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்றைக்கு தமிழக முதல்வரின் 85-ம் அகவை அகமகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

முதல்வர் கருணாநிதியின் மூச்சும், பேச்சும், தமிழ், தமிழர், தமிழகம், இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு பற்றியே தான் என்பது வரலாறு. அவரது குழந்தைப் பருவத்திலேயே தமிழ் மொழிக்கும், வாலிப வயதில் தமிழர்க்கும், இன்றைக்கு தமிழக உயர்வுக்கும், இந்திய வளர்ச்சிக்கும் கிஞ்சித்தும் தணியாத உணர்வோடு தளராது தொடர்ந்து கடும் பணியாற்றி வருபவர் அவர்.

முதல்வர் கருணாநிதி, கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்ற பன்முக ஆற்றல் பெற்ற பேரறிவுப் பெருந்தகை அவர் என்பதையெல்லாம் விட அவர் நட்புக்கு இலக்கணம், மகத்தான மனிதநேயர் என்கிற பண்பால் அவரது புகழ் மேலும் கோபுர கலசமாய் உயர்ந்து ஒளிர்கிறது.

தமிழகத்தின் உயர்வுக்காக, வளர்ச்சிக்காக சேது சமுத்திரத் திட்டத்தை 'சேதுராம்" திட்டம் என்று கூட மாற்றிக் கொள்ளலாம். இது எனது பிறந்தநாள் செய்தி என்று நேற்று அவர் அறிவித்துள்ள கருத்து எக்காலத்தும் போற்றப்பட வேண்டிய அற்புதமான பிரகடனம் என்றே சொல்வேன்.

குறிப்பாக ஆன்மீகம் தொடர்பான எனது கொள்கை, என்னுடைய கட்சியின் அடிப்படை நோக்கம் எது என்பதையெல்லாம் விட, தமிழக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தான் எனக்கு முக்கியம் என்கிற பொருளைத் தருகிற அவரது பிறந்த நாள் செய்தியை வரலாறு போற்றும்.

இவ்வாறு வரலாற்று நாயகனாய் வாழும் முதலமைச்சர் பூரண நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இந்தியத் திருநாடு மற்றும் தமிழகம் உயர்ந்தோங்கிட, வாழ்வாங்கு வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+