மேல்மலையனூர் கோவிலில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் கோவிலில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நேற்றும் அமாவாசை தினத்தன்று விழா நடந்தது.
இதில், தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில பக்தர்கள் பெருமளவல் கூடியிருந்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் பூஜையைக் காணவும், அம்மனை தரிசிக்கவும் கூடியிருந்தனர்.
ஏராளமான சீரியல் செட் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அந்த விளக்குகளின் வயர்கள் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாத வகையில், தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது திடீரென ஒரு விளக்கின் வயர் அறுந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். பலர் கூட்ட நெரிசலில் சிக்கி விழுந்தனர்.
இந்த பயங்கர சம்பவத்தில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சென்னை ராணி (45), பச்சையம்மாள் (40), உத்திரமேரூர் கலியாம்பூண்டி முருகன் (24), திருக்கழுக்குன்றம் ரவி (28) உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை செஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவர்களில் 4 பேர் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனை போலீஸார் கொண்டு சென்றனர்.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியின்போது 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் ஒருவர் உயிரிழந்தார்.
இப்படித் தொடர்ந்து இந்தக் கோவிலில் உயிரிழப்புகள் நடந்து வருவதைத் தடுக்க கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எடுக்கத் தவறி விட்டன என்று பக்தர்கள் குமுறலுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக மேல்மலையனூரில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications