கர்நாடக சட்டசபை சபாநாயகரானார் ஷெட்டார்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை சபாநாயகராக ஜெகதீஷ் ஷெட்டார் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வர் எதியூரப்பாவின் எதிர்ப்பாளரும் முன்னாள் கர்நாடக பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டார் தனக்கு அமைச்சர் பதவி தான் வேண்டும், சபாநாயகர் பதவி வேண்டாம் என்று கூறி வந்தார்.
ஆனால், அவரை அரசியல்ரீதியில் ஓரம் கட்டும் வகையில் சபாநாயகர் பதவி தர முடியும் என எதியூரப்பா கூறிவிட்டார். இதையடுத்து ஷெட்டாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
5 அரசு பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆனாலும் இந்த விஷயத்தில் பாஜக தவிர ஆர்எஸ்எஸ், விஎச்பியின் ஆதரவையும் பெற்றார் எதியூரப்பா.
இதையடுத்து ஷெட்டாரை டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை சமாதானம் பேசியது. இதைத் தொடர்ந்து சபாநாயகராக அவர் ஒப்புக் கொண்டார்.
இந் நிலையில் நேற்று கர்நாடகத்தின் 13வது சட்டசபை கூடியது. இன்று சபாநாயகர் தேர்வு நடந்தது. இதில் ஷெட்டார் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து அவர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரையும் நிறுத்தாத எதிர்க் கட்சிகளுக்கு எதியூரப்பா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் ஷெட்டாரையும் வாழ்த்திப் பேசினார் எதியூரப்பா.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications