வறுமையால் மேற்படிப்புக்கு ஏங்கும் பார்வையற்ற மாணவர்
சாத்தான்குளம்: பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், படிக்க வசதி இல்லாததால் மேல் படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆனந்த்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் பெரிய இசக்கி. இவரது மகன் பி.ஆனந்த். ஆனந்துக்கு 5 வயது இருக்கும்போது அவருக்கு திடீரென்று கண்பார்வை பறிபோனது.
பார்வையற்ற நிலையிலும் அவர் ஆர்வமாக பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். தற்போது பிளஸ்டூ முடித்துள்ள ஆனந்த் 1047 மார்க் பெற்று பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
முன்பு 10ம் வகுப்பு தேர்வில் இவர் 447 மார்க் எடுத்து சாதனை படைத்தார். ஆனந்தின் சாதனை பிறரை வியக்க வைத்துள்ளது. ஆனந்தின் கல்வி சாதனையின் பின்னே அவரது வறுமையும், ஏழ்மையும் பளிச்சிடுகிறது.
தந்தை பெரிய இசக்கி சென்னையில் பீங்கான் கடையில் வேலை செய்து வருகிறார். அண்ணன் மாடசாமி சென்னையில் வேன் டிரைவராக உள்ளார். இவர்களால் ஆனந்தின் படிப்புக்கு போதிய அளவு உதவ முடியவில்லை. ஏழ்மையிலும் சாதித்த ஆனந்த், சர்க்கரை வியாதி காரணமாக அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலையில் உள்ளான்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக ஆசைப்படும் ஆனந்தின் மேற்படிப்பு கனவாக உள்ளது. கல்வி கற்க அதிக ஆர்வம் இருந்தும் குடும்ப சூழ்நிலை ஆனந்தை கலங்க செய்துள்ளது.
குடும்ப பொருளாதாரம் கை கொடுக்காத நிலையில் ஆசிரியர் பயிற்சியாவது படிக்க வேண்டும் என்ற ஆவல் ஆனந்திற்கு உள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், சிறுவயதிலேயே பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படித்து வருகிறேன். பிளஸ்டு முடித்துள்ள எனக்கு மேற்படிப்பு படிக்க பொருளாதார நிலை கஷ்டமாக உள்ளது. மாநில அரசு இதற்கு உதவ வேண்டும் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications