பஸ், லாரி, வேன், ஆட்டோ கட்டணம் உயரும்

அதே போல தனியார் பேருந்துகள், லாரிகள், வேன்கள், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகன நிறுவனங்களுக்கும் செலவு அதிகரிக்கவுள்ளது. இதனால் பஸ், லாரிகள் உள்பட சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்கள் நிச்சயம் உயரும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 19,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு மாதம் 5.69 கோடி லிட்டர் டீசல் செலவாகிறது. இப்போது டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்துள்ளதால், மாதம் ரூ. 17 கோடி செலவாகும்.
2001ம் ஆண்டு்க்குப் பின் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படாத நிலையில், போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. இப்போதைய டீசல் விலை உயர்வால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.
ஆனாலும், கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தாது என்றே தெரிகிறது.
ஆனால், தனியார் நிறுவனங்களால் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 43 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால், ஏற்கனவே தனியார் பேருந்து நிறுவனங்கள் கஷ்டத்தில் தான் உள்ளன.
கட்டண உயர்வை அரசு அனுமதிக்காவிட்டால் இந்தத் தொழிலை தொடர்ந்து நடத்துவது சிரமம் என்கின்றனர் அவர்கள்.
அதே போல லாரி, வேன் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்களும் இந்த டீசல் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விலை உயர்வை சமாளிப்பது குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் கூட்டம் வரும் 7ம் தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் கட்டண உயர்வு குறித்தும் போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவாகும் எனத் தெரிகிறது.
போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் உயர்ந்தால் அரிசியில் ஆரம்பி்த்து சோப்பு உள்பட அத்தியாவசியப் பொருட்கள், வீட்டு-அலுவலக உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications