ஓகேனக்கல்: தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு விளக்கம்
டெல்லி: பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதோ, அதேபோலத்தான் 1998ம் ஆண்டு ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜனார்த்தன பூஜாரிக்கு ஜோஸ் எழுதியுள்ள கடிதத்தில், இரு மாநிலங்களுக்கும் இடையிலான பங்கு நீர் போக, காவிரியில் மீதமுள்ள நீரை பெங்களூர் நகருக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கர்நாடக அரசு கோரியது.
பெங்களூர் குடிநீர்த் திட்டத்தின் அவசரத்தைக் கருதி 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஆட்சேபனை இல்லை சான்றிதழை வழங்கியது.
அதன் பின்னர், பெங்களூர் திட்டத்தைப் போலவே, காவிரியில் 1.4 டிஎம்சி தண்ணீரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தர வேண்டும் என தமிழக அரசு மத்திய நீர்வளத்துறையை அணுகியது.
இதையடுத்து 1998ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி இரு மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை கூட்டியது.
இக்கூட்டத்தில் கர்நாடக மாநில தலைமைச் செயலாளரும் கலந்துகொண்டார்.
இரு மாநிலங்களும், தத்தமது குடிநீர்த் திட்டம் தொடர்பாக அடுத்தவருக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் பின்னர் பெங்களூர் குடிநீர்த் திட்டத்திற்கு எப்படி ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டதோ, அதேபோல, 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும் ஆட்சேபனை இல்லை சான்றிதழை மத்திய நீர்வளத்துறை வழங்கியது என்று கூறியுள்ளார் ஜோஸ்.
ஓகேனக்கல் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலவிய நேரத்தில் இந்த விவரத்தை வெளியிடாத மத்திய அரசு, இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் தோற்றுப் போய், பாஜக அரசு வந்துள்ள நேரத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications