கருணாநிதியின் பிறந்த நாள் பரிசு: வைகோ கேலி
நாகர்கோவில்: முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பரிசாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
நாகர்கோவிலில் நடைபெற்ற தொண்டரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொது செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே விலை வாசி உயர்வு நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த விலை ஏற்றத்தை தவிர்க்க பல வாய்ப்புகள் இருந்தும் அதை மத்திய மாநில அரசுகள் செய்யவில்லை. மேலும், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் குறைந்து விடக்கூடாது என்றும், அரசின் வருவாய் குறைந்து விடக்கூடாது என்பதற்காவும் பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் தவறான கொள்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இது வரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்களுக்கு துன்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசுக்கு துணையாகவும், ஆதரவாகவும் உள்ள கட்சிகள் , மத்திய அரசை கண்டித்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல்.
தற்போது கருணாநிதி பிறந்த நாள் விழாவை திருவிழாவாக கொண்டாடி வருகிறார். அதற்கு மத்திய அரசு கொடுத்த பரிசு தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றார் வைகோ.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications