விடுதியில் இடமில்லை-திருப்பதியில் பக்தர்கள் சாலை மறியல்
திருப்பதி: திருப்பதியில் விடுதிகளில் இடம் கிடைக்காததால் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான விடுதிகள் இல்லை.
விடுதி வசதிகளை தேவஸ்தானம் விரிவாக்கி வந்தாலும் பக்தர் கூட்டம் அதைவிட அதிகரித்து வருகிறது. இந் நிலையில் நேற்று திருப்பதி தேவஸ்தான விடுதி முன் பதிவு மையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.
அவர்களிடம் தேவஸ்தான ஊழியர்கள் தற்போது விடுதியில் இடம் இல்லை. இங்கு காத்திருக்க வேண்டாம் என்று கூறவே அவர்கள் கோபமடைந்தனர்.
அவர்கள் திருப்பதி-திருமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி எர்ரம் ரெட்டி, கண்காணிப்பு அதிகாரி ரமணா ஆகியோர் விரைந்து வந்து பக்தர்களை சமாதானப்படுத்தி, நிலைமையை விளக்கினர்.
இதையடுத்தே பக்தர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் திருமலையில் பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications