திமுக அரசுக்கு அட்வைஸா? - காங்கிரஸுக்கு ஆற்காடு வீராசாமி டோஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்தில் ஆண்டாண்டு தோறும் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சியைப் போல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அறிவுரை கூறி விட்டு பிறகு தமிழக அரசுக்கு அறிவுரை கூறட்டும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியினுடைய தமிழ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, சமையல் எரிவாயு மீதான விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்து ஆந்திர, டெல்லி முதல்-அமைச்சர்கள் ராஜ சேகர ரெட்டி, ஷீலா தீட்சித் ஆகியோர் உடனடியாக தங்களது மாநிலங்களில் உத்தரவிட்டுள்ளனர்.

ஆந்திராவில் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 10 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா, டெல்லி மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.3ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்தி அறிவித்த மறுநாளே முதல்-அமைச்சர் கருணாநிதி, நிதித்துறைச் செயலாளரோடு கலந்து பேசி டீசலுக்கு 2 சதவிகித விற்பனை வரியைக் குறைத்துள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் ரூ. 260 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்- அமைச்சர் கருணாநிதி அமல்படுத்தி வரும் திட்டங் களான விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரூ. 7 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்ததைப் போலவும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்று தொடர்ந்து வழங்கி வருவதைப் போலவும்;

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துண வில் வாரம் 3 முட்டைகள் வழங்குவதைப் போலவும், ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ரூ. 20 ஆயிரம் கொடுப் பதைப் போலவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை கொடுப்பதைப் போலவும்;

தமிழகத்தில் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி கள் இல்லாத பயனாளிகள் 60 லட்சம் பேருக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் விநியோகித் ததைப் போலவும், இலவச எரிவாயு மற்றும் சிலிண் டர்கள் 11 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளதைப் போலவும், தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப் படுத்துவதற்காக நியாய விலைக் கடைகள் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வதைப் போலவும்;

அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர் களுக்கு இலவசக் கல்வி வழங்குவதைப் போல வும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் கொடுப்பதைப் போலவும்'', எந்தத் திட்டங்களையும் காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற ஆந்திரா விலோ, டெல்லி யிலோ அல்லது மற்ற மாநிலங் களிலோ அமல்படுத்த வில்லை என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

இதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற கிருஷ்ணசாமி தமிழகத்தில் தலைவர் கலைஞரால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற இந்தத் திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் அமல்படுத்த வேண்டுமென்ற அறிவுரை வழங்கி, அதற்குப் பிறகு தமிழகத்தில் சமையல் எரிவாயுக் கட்டணத்தை உயர்த்தக் கூடாதென்று அறிக்கை விட்டிருந்தால் அது நியாயமாக இருக்கும்.

அதை விட்டு விட்டு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான மக்கள் நலத் திட் டங்களை தமிழகத்தில் ஆண்டாண்டு தோறும் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சிக்கு இத்தகைய இலவச ஆலோசனைகளை வழங்குவது என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+