'அண்ணன் வர்றார்லே!'- சென்னையை கலக்கிய அழகிரி போஸ்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

Azhagiri Poster
சென்னை: மு.க.அழகிரிக்கு திமுகவில் முக்கியப் பதவி கிடைக்கப் போகிறது, சென்னைக்கு அவர் இடம் பெயரவுள்ளார் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் சென்னை நகரில் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திமுகவில் சமீப காலமாக பெரும் பரபரப்பு குடியேறியுள்ளது. அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே இருந்த, தற்போது காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட பனிப்போர் இப்போது பெரும் பதவிப் போராக மாறி திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக பொதுக்குழு மற்றும் முதல்வரின் பிறந்த நாளன்று பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் சந்தடியில்லாமல் நடந்து முடிந்துள்ளன. முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி-ஸ்டாலின் அறிவுரைப்படி, முதல்வர் கருணாநிதியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூற முயன்ற, மாறன் சகோதரர்களை ஆள் வைத்துக் கண்காணித்து அவர்களை கோபாலபுரம் வீட்டுப் பக்கம் கூட அண்ட விடாமல் தடுத்து விட்டார் அழகிரி.

அதேபோல சிஐடி காலனி வீட்டுக்கு வந்து விட்ட அவர்களை முதல்வரை சந்திக்க விடாமல் போன் மூலமே தடுத்து விட்டார் அழகிரி.

இந் நிலையில் சென்னை நகரில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டி வரும் போஸ்டர்கள் திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், பொது ஜனங்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த போஸ்டரில் பக்கம் பக்கமாக வசனங்கள் எதுவும் இல்லை. மேலே முதல்வர் கருணாநிதியின் சிறிய படம். நடுவே பெரிதாக அழகிரியின் படம். கீழே, 'அண்ணன் வர்றார்லே' என்ற வாசகம். அவ்ளோதான்.

இந்த வாசகத்திற்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. மதுரையில் இருந்தபடி இதுவரை செயல்பட்டு வந்த அழகிரி விரைவில் சென்னைக்கு இடம் பெயரப் போகிறார் என்பது சமீபகாலமாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு செய்தி.

மு.க.அழகிரி சென்னையில் குடி புக கிழக்குக் கடற்கரைச் சாலையில் வீடு ஒன்று ரெடியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அது கூடிய விரைவில் நிஜமாகப் போகிறது என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல இருக்கிறது இந்த 'அண்ணன் வர்றார்லே'.

மேலும், திமுகவில் அழகிரிக்கு முக்கியப் பதவி கிடைக்கப் போவதையும் இது கூறுவதாக உள்ளதாக திமுகவினர் கருதுகிறார்கள்.

ஆனால் ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த போஸ்டர்கள் மேலிடத்து உத்தரவுப்படி அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.

போஸ்டரில் உள்ள வார்த்தை, அதன் ஸ்டைல் ஆகியவற்றைப் பார்க்கும்போது, அது மதுரையில் கருவாகி, பிரிண்ட் ஆகி சென்னைக்கு வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே, தா.கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து அழகிரி விடுதலை செய்யப்பட்டவுடன், சென்னை நகரின் பல பகுதிகளிலும் 'Boss நீங்க Pass' என்ற வாசகத்துடன் கூடிய பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் அண்ணன் வர்றார்லே என்ற போஸ்டர் திமுகவினரிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+