விஜயன் கொலை- 'கூலிப்படை' கார் டிரைவர் கைது?
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 4ம் தேதி இரவு கோட்டூர்புரம் ரோட்டில் விஜயன் கொலை செய்யப்பட்டார். பின்னால் வந்த ஒரு கார் இவரது காரின் மீது மோதியது. பின்னர் அதில் இருந்தவர்கள் இறங்கி வந்து விஜயனை கொலை செய்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக தென் சென்னை இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் மவுரியா ஆகியோரி்ன் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
விஜயனுக்கும், அவரது மனைவி சுதாவின் அக்காள் லதாவின் கணவர் ராஜேந்திரனுக்கும் இடையே எம்ஜிஆரின் சொத்துக்களை நிர்வகிப்பதில் தகராறு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ராஜேந்திரன், லதா, அவர்களது மகன் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் கொலை நடந்த இடத்தில் நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விஜயனின் கார் மீது மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரை தனிப்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவரது பெயர் சுந்தரவேல் என்று கூறப்படுகிறது. இந்தக் கைது குறித்து போலீசார் இன்னும் தகவல் ஏதும் வெளியிடவில்லை என்றாலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இவரது தலைமையில் வந்த கூலிப் படை தான் விஜயனைக் கொன்றதாக தெரிய வந்துள்ளது. இவரை அனுப்பியது யார் என்று விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கில் ராஜேந்திரன், குமார், லதா ஆகியோர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications