காவிரி பாசனத்துக்காக 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 12ம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையிலிருந்து 16ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும்.
விவசாயப் பெருங்குடி மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்ப் பங்கீட்டில் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேவை ஏற்பட்டால் பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேட்டூர் அணையி்ன் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102.82 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் கொள்ளவு 120 அடியாகும்.
அணையிலிருந்து வினாடிக்கு 800 க்யூசெக்ஸ் நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 3,867 க்யூசெக்ஸ் நீ்ர் வந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications