இந்தியா-பாக். பிரிவினையை முஸ்லீம்கள் விரும்பவில்லை: அன்சாரி
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் உருவாகும் என அவர்கள் அஞ்சினர் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.
சிவில் விடுதலை அமைப்பைச் சேர்ந்த பல்ராஜ் பூரி, முஸ்லீம்ஸ் ஆஃப் இந்தியா சின்ஸ் பார்ட்டிசன் என்கிற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.
இந்த விழாவில் கலந்துகொண்ட ஹமீத் அன்சாரி நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 1947ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்தபோது அதை முஸ்லீம்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. இதனால் பல பிரச்சினைகள் உருவாகும் என்று அவர்கள் அஞ்சினர்.
பல முஸ்லீம் அறிஞர்கள், பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். ஜின்னாவின் இரு நாடு கொள்கையை அவர்கள் ஏற்கவில்லை.
பாகிஸ்தான் வருமாறு எனது தந்தைக்கும் ஜின்னா அழைப்பு விடுத்தார். ஆனால் அதை எனது தந்தை ஏற்கவில்லை. இந்திய மக்களுக்காக உழைக்க தான் விரும்புவதாக கூறி விட்டார் என்றார் அன்சாரி.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications