அடாவடி உ.பி. அமைச்சர் நீக்கம்-மாயாவதி அதிரடி
லக்னெள: கற்பழிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை விடுவிக்கக்கோரி, உத்தரப் பிரதேச மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜமுனா நிஷாத், தன் ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தைத் தாக்கினார். இதில் போலீஸ்காரர் கொலையானார்.
இதையடுத்து அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியுள்ளார் முதல்வர் மாயாவதி. நிஷாத் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
கோரக்பூர் அருகே மகராஜ் கஞ்ச் பகுதியில் தலித் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ஆனால், அவரை விடுவிக்கக்கோரி ஜமுனா நிஷாத் 50 ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.
போலீஸாரை அக் கும்பல் தாக்க முயலவே அவர்கள் தடியடி நடத்தினர். அப்போது ஜமுனாவி்ன் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ஏட்டு கிருஷ்ணானந்த் ராய் என்பவர் பலியானார்.
இதையடுத்து அமைச்சர் ஜமுனா நிஷாத், அவரது ஆதரவாளர்கள் உள்பட 50 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நிஷாத்தை தனது வீட்டுக்கு வரவழைத்த மாயாவதி டோஸ் விட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரை பதவி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
தலித் வகுப்பைச் சேர்ந்த பெண் கற்பழிக்கப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவை வைத்து ஜமுனா கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications