சென்னை: ரூ.2000 கோடியில் மோசர் பேயர் ஹார்ட்வேர் தொழிற்சாலை
சென்னை: சென்னை அருகே ஒரகடத்தில் ரூ. 2,000 கோடி முதலீட்டில் சிலிகான் அடிப்படையிலான போட்டோ வோல்டிக் செல்கள், மெமரி சிப்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் தொழிற்சாலையை மோசர் பேயர் அமைக்கவுள்ளது. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மெமரி சிப்ஸ், யு.பி.எஸ். டிரைவ்ஸ் போன்ற பொருள்களின் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான மோசர் பேயர்
போட்டோ வோல்டிக், நானோ தொழில்நுட்பம், செமி கண்டக்டர்ஸ், மற்றும் பொழுதுபோக்குத் தொழில் சாதனங்கள் முதலியவற்றின் ஆராய்ச்சிகளிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
சென்னைக்கு அருகே ஒரகடம் சிப்காட் உயர் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சிலிகான் அடிப்படையிலான போட்டோ வோல்டிக் செல்கள், மெமரி சிப்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ. 2,000 கோடி முதலீட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இத்தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே சிக்னட் சோலார் நிறுவனத்துடன் ரூ. 2,000 கோடி முதலீட்டில் சிலிக்கான் அடிப்படையில் மெல்லிய போட்டோ வோல்டிக் பொருள்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
அதே வசதியுடன் மோசர் பேயர் தொழிற்சாலையும் அமைவதன் மூலம் சென்னை, ஹார்ட்வேர் தயாரிப்பு மற்றும் போட்டோ வோல்டி பொருள்கள் தயாரிப்பில் முக்கிய மையமாக உருவெடுக்கவுள்ளது.
இத்தொழிற்சாலையை அமைப்பதற்காக, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் அரசின் சார்பில் தொழில்துறைச் செயலாளர் எம்.எஃப்.பரூக்கி, மோசர் பேயர் இந்தியா தொழிற்சாலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநன தீபக் பூரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவும் உடனிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications