தூத்துக்குடி ஏடிஎம்மில் ரூ.500 கள்ள நோட்டுகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி நியூ காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கேரளாவை தலைமையிடமாக கொண்டு தூத்துக்குடி பெரைரா தெருவில் செயல்படும் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம்மில் தனது கணக்கில் இருந்து ரூ. 2,000த்தை எடுத்தார்.
அப்போது 500 ரூபாய் நோட்டுகளும், ஐந்து 100 ரூபாய் நோட்டுகளும் வந்தன. இதில் ஒரு 500 ரூபாய் நோட்டில் மட்டும் வித்தியாசம் காணப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மாரியப்பன் ஏடிஎம்மின் செக்யூரிட்டரியிடம் அந்த ரூபாய் நோட்டின் எண்ணை தெரிவித்து விட்டுச் சென்றார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடமும் சென்று புகார் செய்தார். மேலும் தனக்கு வேறு நோட்டை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்தற்கான ரசீதை தவறவிட்டதால் வங்கி மேலாளர் ரூபாய் நோட்டை மாற்றி தர முடியாது என கூறிவிட்டார்.
அதே ஏடிஎம் சென்டரில் இருந்து கடந்த 2ம் தேதி பணம் எடுத்த மற்றொரு வாடிக்கையாளருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டு வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications