யுஏஇ விசிட் விசா கட்டணம் கடும் உயர்வு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான விசிட் விசா கட்டணம் 200 திர்ஹாமில் இருந்து 500 திர்ஹாமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இக்கட்டண உயர்வு வரும் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற அமீரக அமைச்சரவை கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் விசிட் விசா 16 வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா, மருத்துவம், கண்காட்சி, கல்வி ஆகிய பிரிவுகளும் அடக்கம்.
30 நாட்களுக்கான விசிட் விசா கட்டணம் 500 திர்ஹம். இவ்விசாவினை புதுப்பிக்க முடியாது. 90 நாட்களுக்கான விசிட் விசா 1,000 திர்ஹம் கட்டணமாகும்.
மாணவருக்கான விசிட் விசா 1000 திர்ஹம். இதைப் பெற அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 1000 திர்ஹம் டெபாசிட் செலுத்த வேண்டும்.
கருத்தரங்கில் பங்கேற்போருக்கான விசா 100 திர்ஹம். ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசா திர்ஹம் 100.












Click it and Unblock the Notifications