சென்னைக்கு 5 புதிய சட்டசபைத் தொகுதிகள்
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக 5 சட்டசபைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டு அவை அனைத்தும் சென்னை எம்.பி. தொகுதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
தொகுதி மறுசீரமைப்பின் படி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளும் மறுசீரமைக்கப்பட்டன. சில தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. சில தொகுதிகள் ரத்து செய்யப்பட்டு, அவற்றுக்குப் பதில் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை அப்படியேதான் உள்ளது.
இந்த வகையில்,சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 5 புதிய சட்டசபைத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கொளத்தூர், விருகம்பாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய ஐந்து தொகுதிகளும் சென்னை எம்.பி.தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தென் சென்னை எம்.பி. தொகுதியில், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இடம் பெறும் மற்ற 3 தொகுதிகள்: சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர்.
வட சென்னை எம்.பி. தொகுதியில், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் இடம் பெறும் மற்ற நான்கு தொகுதிகள்: திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், ராயபுரம்.
மத்திய சென்னை தொகுதிகள்: வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்.
இதுவரை தனித்தனியாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டு விட்டது. அது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்ற பெயரில் அழைக்கப்படும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications