மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை: சென்னையில் எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் மீது போலீஸார் சரமாரியாக தடியடி நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மாணவ, மாணவியர் இன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
எம்.எஸ்., எம்.டி போன்ற மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களாகப் பணியாற்றாத 21 பேர் தங்களையும் கவுன்சிலிங்குக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்போடு கவுன்சிலிங்குக்கு வந்திருந்தனர்.
அவர்களை அனுமதித்தால் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என மற்ற மருத்துவர்களும் கோரினர். இதுதொடர்பாக பிரச்சினை உருவாகி சாலை மறியல் போராட்டத்தில் டாக்டர்கள் குதித்தனர்.
இதையடுத்து போலீஸார் சரமாரியாக தடியடி நடத்தி கூட்டத்ைதக் கலைத்தனர். அதிலும் வசந்தி என்கிற சப் இன்ஸ்பெக்டர், ஒரு மாணவியை துரத்தி துரத்தி அடித்தது அனைவரையும் அதிர வைத்தது.
இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இச்சம்பவத்திற்குக் கண்டனம் ெதரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை உள்பட அனைத்து இடங்களிலும் மருத்துவகல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அரசு டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார் கள்.
சென்னை அரசு தலைமை பொது மருத்வமனை பயிற்சி டாக்டர்கள் 400 பேரும், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்களும் இன்று மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பயிற்சி டாக்டர்களுடன் சென்னை மருத்துவ கல் லூரி மாணவர்கள் 1027 பேர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர்.
இதேபோல் பயிற்சி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணிக்கு வந்தனர்.
நெல்லை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் இன்று காலை 10-30 மணிக்கு தங்கள் பணியை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல, மதுரை, சேலம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளிலும் போராட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications