டூட்டியில் 'உல்லாசம்'- ஏட்டு மீது நடவடிக்கை
ஈரோடு: பணியில் இருந்தபோது விபச்சாரப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் ரவி. நேற்று முன்தினம் இரவு இவருக்கு ரோந்துப் பணி கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் மொடக்குறிச்சி பஸ்நிலையம் வந்தார் ரவி. அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அப்பெண் விபச்சாரப் பெண் என்றும், அவருடன் உல்லாசமாக இருக்கவே 3 வாலிபர்களும் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபர்களை எச்சரித்து விரட்டி விட்டார் ரவி. பிறகு ஒரு மோட்டார் சைக்கிளில், அப்பெண்ணை அழைத்துச் சென்றார். விடிய விடிய அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டடு அதிகாலையில், நல்ல போதையில் காவல்நிலையம் வந்தார்.
அவரை உள்ளே விடாமல் போலீஸார் வாசலிலேயே நிறுத்தி அமர வைத்தனர். பின்னர் உயரதிகாரிகளுக்குத் தகவல் போனது.
இதையடுத்து ரவியிடம் விசாரணைநடத்தப்பட்டது. அப்போது, பஸ் நிலையத்தில் அந்தப் பெண்ணை பிக்கப் செய்த ரவி, நேராக நஞ்சை ஊத்துக்குளி என்ற இடத்திற்குச் சென்றார். அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில் வைத்து அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.
பின்னர் அவரை அனுப்பி விட்டு மது போதையில் காவல்நிலையம் வந்துள்ளார். ஏற்கனவே நான்கு முறை பல்வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் ஆனவர் ரவி.
இந்த முறை பணி நேரத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாலும், போதையில் காவல் நிலையம் வந்ததாலும் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அவிநாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications