முத்தரப்பு தொடர்: பாக்.கை வீழ்த்திய இந்தியா
டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரில், தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சுருட்டி அபார வெற்றியைப் பெற்றது இந்தியா.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் டாக்காவில் தொடங்கியுள்ளது.
இதில் நேற்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் ஆடிய இந்தியாவுக்கு ஷேவாக்கும், கம்பீரும் அபார தொடக்கத்ைத கொடுத்தனர். ஷேவாக் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் 89 ரன்களைக்குவித்தார். இதில் அவர் விளாசிய 13 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடக்கம்.
மறு முனையில் 62 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார் கம்பீர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 155 ரன்களைச் சேர்த்தனர்.
பின்னர் வந்த யுவராஜ்சிங் 54 ரன்களைச்சேர்த்தார். கேப்டன் டோணி 24 ரன்களும், ரெய்னா 26 ரன்களும்சேர்த்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களைக் குவித்தது இந்தியா.
பின்னர் ஆடிய பாகிஸ்தானுக்கு சல்மான் பட் 9 ரன்களில் வீழ்ந்து ஏமாற்றத்தை அளித்தார். அக்மல் 38 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் சலீம் மாலிக் மட்டும் சிறப்பாக ஆடினார். அவர் 53 ரன்களைச் சேர்த்தார். அப்ரிதி 23 ரன்களும், மிஸ்பா உல் ஹக் 24ரன்களும்
சேர்த்தனர்.
பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாரும், சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவும் தவிடுபொடியாக்கினர். இருவரும் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். இஷாந்த் சர்மாவும், யுவராஜ்சிங்கும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இறுதியில் 35.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான். இதன் மூலம் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெருமையையும் இந்திய அணி பெற்றது.
ஆட்ட நாயகனாக வீரேந்திர ஷேவாக் தேர்வு செய்யப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications